உள்ளூர் செய்திகள்

கோபுரமாய் நிமிருங்கள்

* பேராசையால் மனதில் தீய இயல்புகள் உண்டாகும். இறுதியில் அழிவை தரும்.* உண்மையும், நேர்மையும் மனிதனை கோபுரம் போல நிமிரச் செய்யும்.* பிறர் பழிக்கும் விதத்தில் நடக்கக் கூடாது. பழி இல்லாத பண்பே சிறப்பு மிக்கது.* ஆயுளை நீட்டிக்கும் சக்தி நமக்கு இல்லை. அதனால், விரைந்து நற்செயல்களில் ஈடுபடுங்கள்.* தியானம் செய்தால் அகந்தையும், ஆசையும் அழியும். அமைதியும், இன்பமும் பெருகும்.* போதும் என்ற மனம் இருந்தால் தானும் வாழ்வதோடு, மற்றவர்களையும் வாழ வைக்கலாம். -மகாவீரர்