பசித்தவர்க்கு உணவளியுங்கள்
* கடவுள் ஒருவரே. அவரே அருட்பெருட்ஜோதியாகத் திகழ்கிறார். தனிப்பெருங்கருணையோடு நம்மைக் காத்தருள்கிறார்.* உயிர்க்கொலை செய்வதும், அவ்வுயிர்களின் புலாலைப் புசிப்பதும் அறவே கூடாது.* கண்ணில் காணும் உயிர்களை எல்லாம் தன்னுயிராக மதித்து வாழ்வதே ஆன்மநேய ஒருமைப்பாடு ஆகும். இதை எல்லா மக்களும் கடைபிடிக்க வேண்டும்.* ஏழைகளின் பசிப்பிணி போக்குவதே ஜீவகாருண்யம். இந்த ஒழுக்கம் ஒன்றே பேரின்ப வீட்டின் திறவுகோல். பசித்த வயிறுக்கு உணவளித்தவன் பெரும்புண்ணியத்தை அடைவான். நோய்நொடிகள் அவனை விட்டு விலகும். நீண்ட ஆயுள் உண்டாகும். * எதற்காகவும் கோபம் கொள்வதோ, பொய் சொல்வதோ, பிறர் நலன் கண்டு பொறாமை கொள்வதோ கூடாது. உரத்துப்பேசுவது, விவாதம் செய்வது, வழக்கிடுவது, பிறரிடம் சண்டையிடுவது கூடாது.* பதட்டம் கொள்வதால் பிராணவாயு அதிகமாகச் செலவாகும். எனவே, எச்செயலையும் நிதானத்துடன் அணுகுவதே சிறந்தது.வள்ளலார்(இன்று வள்ளலார் பிறந்ததினம்)