நல்ல மனம் வாழ்க!
UPDATED : டிச 01, 2013 | ADDED : டிச 01, 2013
* பிறருடைய பசியைப் போக்குவதோடு நமது கடமை முடிந்து விடுவதில்லை. அவர்களின் துன்பத்தையும் களைய முயற்சிக்க வேண்டும்.* அரிதான மானிட தேகம் எல்லா உயிர்களுக்கும் கிடைப்பதில்லை. இதைப் பாதுகாத்து திடமாக வைத்துக் கொள்வது நம் கடமை. * கற்பனை அனைத்தையும் கடந்தவன் இறைவன். அவனை நம் கற்பனை எல்லைக்குள் கொண்டு வர இயலாது.* அம்பை ஏவி விட்டவனுக்குப் பதிலாக, அம்பையோ, அம்பு செய்து கொடுத்தவனையோ நொந்து கொள்வதால் ஒருபயனும் இல்லை.* உத்தமர் தம் உள்ளத்தில் கடவுள் பிரணவ ஒளியாக வீற்றிருப்பார். அவர் எண்ணம், சொல், செயல் அனைத்தும் புனிதமானதாக இருக்கும்.* பிறர் தயவை நாடாமல் மனிதன் வாழ வேண்டும். தன்னை நாடி வருபவர்களுக்கு அள்ளி வழங்கும் நல்ல மனம் பெற்றிருக்க வேண்டும்.- வள்ளலார்