தைரியசாலியாய் இரு!
UPDATED : செப் 19, 2014 | ADDED : செப் 19, 2014
* உலக இயந்திரத்தின் சக்கரங்களில் இருந்து தப்பி ஓட நினைக்காதே. வாழ்வின் சூட்சுமம் அறிந்து கொள்ள முயற்சி செய்.* சண்டையிடுவதாலும், பிறரைக் குறை சொல்வதாலும் உலகில் ஒரு நன்மையும் உண்டாகப் போவதில்லை.* சுயநலமின்மையே நல்லொழுக்கம். இது தான் ஒழுக்கத்திற்குரிய ஒரே இலக்கணம்.* கோழை தான் பாவம் செய்கிறான். தைரியசாலியோ ஒருபோதும் பாவம் செய்வதில்லை.* உலகைப் பற்றிய கவலை வேண்டாம். முதலில் உன் வாழ்வை நெறிப்படுத்தி மனத்தூய்மையுடன் இரு.- விவேகானந்தர்