உள்ளூர் செய்திகள்

பொறுமையைக் கடைபிடி

* வாழ்வில் மேல் நோக்கி உயர்த்துவது அனைத்தும் நன்மை. முன்னேற்றத்தை தடுத்து கீழே தள்ளி வீழ்ச்சிக்கு உள்ளாக்குவது தீமை.* நல்லொழுக்கம் என்பதில் சிறிதளவும் சுயநலம் இருப்பது கூடாது. எந்நிலையிலும் பொதுநலத்துடன் இருக்கப் பழகுங்கள்.* இறைவனே ஏழையின் வடிவில் நம் முன் நிற்கிறான். அந்த ஏழையின் துன்பம் துடைப்பது நம் அனைவரின் கடமை.* இறந்த உடலில் உயிர் மீண்டும் புகுவதில்லை. அதுபோல, இறந்த காலமும் மீண்டும் வரப்போவதுஇல்லை. நிகழ்காலமான இன்று வாழ்வதே முக்கியம். * பூமிதேவியைப் போல பொறுமையைக் கடைபிடியுங்கள். பொறுமையுடன் இருப்பவன் காலடியில் உலகமே கிடக்கும்.* ஒற்றுமையுடன் இணைந்து பாடுபட்டு வளர்ச்சிப்பாதையில் முன்னேறுங்கள்.- விவேகானந்தர்