தவறுகளைத் திருத்திக்கொள்!
UPDATED : பிப் 03, 2013 | ADDED : பிப் 03, 2013
* ஒழுக்கத்தை அதிகம் வலியுறுத்தியதோடு, அதை கடைபிடித்தவர்களில் புத்தருக்கு இணையான ஒருவரை உலகம் இதுவரை காணமுடியவில்லை.* ஆயிரம் முறை இடறி விழுவதன் மூலம் நல்ல ஒழுக்கத்தை உறுதியாகப் பின்பற்றி நடக்க முடியும். * ஆன்மிகம் என்பது அனுபவித்து அறியும் விஷயமே தவிர, வெறும் பேச்சன்று.* இரும்பைப் போன்ற மன உறுதியும், மலைகளைத் துளைத்துச் செல்லும் வலிமையும் வந்து விட்டால் கடலையும் கடக்க முடியும்.* அறிவு வளர்ச்சிக்கு ஒரே ஒரு வழிமுறை தான் இருக்கின்றது. அது தான் நம்முடைய மனதை ஒருமுகப்படுத்துவதாகும்.* அன்பில்லாதவன் பெற்ற உலகியல் அறிவும், ஆன்மிக ஞானமும் பயனற்றது. அவனால் கடவுளை ஒருபோதும் அடைய முடியாது.* 'நான் கெட்ட செயலை செய்து விட்டேன்' என்று வருந்துவதைக் காட்டிலும் அதை திருத்திக் கொள்வதே மேலானசெயல்.- விவேகானந்தர்