உள்ளூர் செய்திகள்

மனம் தளராதே! மதி மயங்காதே!

* நமது கைகளில் ஏற்கனவே உள்ள மாபெரும் ஆற்றலை அடக்கி ஆள கற்றுக்கொள்ள வேண்டும். அதை ஆன்மிக சக்தியாக மாற்ற வேண்டும். * நம்பிக்கையை இழந்துவிடாதே. பாதை, கத்தி முனையில் நடப்பதைப் போல மிகவும் கடினமானது தான். எனினும் விழித்துக்கொள், மனம் தளராதே. நீ அடைய வேண்டிய உனது லட்சியமாகிய குறிக்கோளை கண்டுபிடி.* மக்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். நீ உனது சொந்த உறுதியான முடிவில் பிடிப்புடன் இரு. பிறகு நிச்சயமாக மற்றவை நடந்தேறி உலகம் உனது காலடியில் பணிந்து கிடக்கும்.* பிறரை முதலில் நம்புவதைவிட்டு உன்னை நீ முதலில் நம்பு, அனைத்து ஆற்றல்களும் உனக்குள்ளேயே இருப்பதால், அதை உணர்ந்து அந்த ஆற்றலை வெளிப்படுத்து. 'நான் எதையும் சாதிக்கவல்லவன்' என்று சொல். நீ உறுதியுடன் எதையும் பொருட்படுத்தாமல் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகிவிடும்.- விவேகானந்தர்