உள்ளூர் செய்திகள்

அநீதியை எதிர்த்து போராடு

* தெய்வீக உணர்வை எங்கும் பரவ விடுங்கள். உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொரு நிகழ்விலும் அதன் தன்மை வௌிப்படட்டும். * எழுந்து நில்லுங்கள். முழு பொறுப்பையும் உங்களின் தோளில் சுமந்து கொள்ளுங்கள். உங்களின் விதியை படைத்தவர் நீங்களே என்பதை உணருங்கள். * குழந்தைப் பருவத்தில் இருந்தே ஆக்கமும், ஊக்கமும் தரும் நல்ல எண்ணங்களை பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுங்கள். * எதற்காகவும் எள்ளளவும் விட்டுக் கொடுக்க வேண்டாம். அநீதியை எதிர்த்து துணிவுடன் போராடத் தயாராக இருங்கள். * புறம் பேசுவது கூடாது. யாரைப் பற்றியாவது கோள் சொல்ல ஒருவன் நெருங்கினால், அவனை புறக்கணியுங்கள். விவேகானந்தர்