உள்ளூர் செய்திகள்

எது வந்தாலும் எதிர்த்து போராடு!

* மோட்சத்தை தேடி அலையத் தேவைஇல்லை. சுயநலம் சிறிதும் இல்லாமல் பிறருக்கு சேவை செய்பவனைத் தேடி இறைவனே ஓடி வருவார். * கையை கடவுள் படைத்தது கொடுப்பதற்கே. நீ பட்டினியாய் கிடக்க நேர்ந்தாலும் பரவாயில்லை. உன்னிடம் இருக்கும் கடைசிப் பருக்கையையும் பிறருக்கு கொடுத்து விடு. அதனால் உன் வாழ்வு முழுமை பெறும்.* அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற போராட்டம் எழும்போது, உள்ளம் சொல்வதை பின்பற்றுங்கள்.* எதுவந்தாலும் எதிர்த்து போராடு. ஓர் அடியும் பின்வாங்கக்கூடாது. என்ன நடந்தாலும் கலங்காதே.* மரணம் வருவது உறுதியாக இருக்கும் போது மேலான லட்சியத்திற்காக வாழ்ந்து இறந்து போவது சிறந்தது.- விவேகானந்தர்