உள்ளூர் செய்திகள்

உண்மையைப் பின்பற்று

* தெய்வீகம் எப்போதும் நமக்குள் இருந்து கொண்டிருக்கிறது. அதை விழிப்படைய செய்வதே நமது கடமை.* பொதுநலத்துடன் செய்யும் சேவை அனைத்தும் புனிதமானது தான். அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்யும் போது, அது மேலும் புனிதமாகி விடுகிறது.* விக்ரகத்தை வழிபடுகிறோம் என்பதற்காக, கடவுளே விக்ரகம் தான் என்று எண்ணி விடாதீர்கள்.* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்கான ஒரே வழி, பிறரும் தெய்வீக இயல்பை வெளிப்படுத்துவதற்குத் துணை செய்வதாகும்.* அடக்கம் இல்லாத மனமும், அறநெறியற்ற வாழ்வும் நம்மை கீழ்நோக்கி இழுத்துச் செல்லும். அடக்கமுள்ள மனமோ சுதந்திரமாக இருக்கும்.* யாருடைய நெஞ்சம் ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரே மகாத்மா. தூய்மை மிக்க அவர் கடவுளுக்கு மிக நெருக்கமானவராகத் திகழ்வார்.* உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் அதைப் பின்பற்றிச் செல்லுங்கள். கோழையாகவும், வேடதாரியாகவும் இருக்காதீர்கள்.- விவேகானந்தர்