உள்ளூர் செய்திகள்

ஊக்கத்துடன் முன்னேறுங்கள்

* நம்மிடத்தில் நம்பிக்கை, கடவுளிடத்தில் நம்பிக்கை இதுவே வெற்றி பெறுவதற்கான பரம ரகசியம்.* தன்னம்பிக்கை கொண்ட ஒருசிலரின் வாழ்க்கை வரலாறே உலக சரித்திரமாக விளங்குகிறது. * பாவம் என்ற ஒன்று உலகில் இருக்குமானால் அது, 'நான் பலவீனமானவன்; மற்றவர்கள் பலவீனமானவர்கள்' என்று சொல்வது ஒன்று தான்.* சுதந்திரமானவர்களாக வாழுங்கள். எவரிடமிருந்தும் எதையும் எதிர்பார்த்துக் காத்திருக்காதீர்கள். * 'இல்லை' என்றோ, 'என்னால் இயலாது' என்றோ ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்களால் எதையும் சாதிக்க முடியும்.* தோல்வியைப் பொருட்படுத்தாதீர்கள். ஆயிரம் முறை தோற்றாலும் மீண்டும் ஒருமுறை முயற்சியில் இறங்குங்கள்.* சிங்கத்தின் இதயம் படைத்த ஆண்மகனையே திருமகள் விரும்பி சேர்கிறாள். கடந்து வந்த பாதையைப் பின்னால் திரும்பிப் பார்க்கத் தேவையில்லை. ஊக்கத்துடன் முன்னோக்கிச் செல்லுங்கள்.- விவேகானந்தர்