உள்ளூர் செய்திகள்

எங்கும் இருக்கும் சொர்க்கம்

* கடமை ஒவ்வொன்றும் புனிதமானது. அதை பக்தியுடன் செய்வது தெய்வ வழிபாட்டிற்கு சமமானது.* கடவுளிடம் மட்டுமே அனைத்து இயல்புகளும் இருக்க முடியும். ஆனால், மனிதனாய் பிறந்து, நற்செயல்களைச் செய்தால் மட்டுமே அவரைக் காண முடியும்.* இந்த பூலோகத்தில் நமக்கு நாமே சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்ள வழியிருக்கிறது. ஏன்...நரகத்தில் கூட சொர்க்கத்தை உருவாக்க நம்மால் முடியும்.* கடவுளால் தான் கோயிலுக்கு மகிமை. கோயிலால் இறைவன் மகிமை பெற்றான் என்பதில்லை.* நாம் அன்பிற்காகக் கடவுளிடம் அன்பு செய்ய வேண்டும். கடமைக்காகக் கடமை செய்ய வேண்டும்.* உண்மை, தூய்மை, தன்னலமின்மை பெற்றவர்களை அழிக்க வானுலகிலும், மண்ணுலகிலும் எந்தச்சக்தியும் இல்லை.* நம்மிடமுள்ள தெய்வீக இயல்பை, பிறருக்கு உதவி செய்வதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்.* அன்பான செயல்கள் மட்டுமே இனிமையானதாக இருக்க முடியும். சுதந்திர நிலையில் மட்டுமே அன்பு பிரகாசிக்கும்.- விவேகானந்தர்