வெற்றியின் ரகசியம்
UPDATED : மே 10, 2015 | ADDED : மே 10, 2015
* நீங்கள் உங்கள் மீதும், கடவுள் மீதும் நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவே வாழ்வில் வெற்றி அடைவதன் ரகசியம்.* நீங்கள் கடவுளின் குழந்தைகள். அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள்.* ஆயிரம் முறை தோற்றாலும் முயற்சி செய்வதை கைவிடாதீர்கள். லட்சியத்தை நோக்கிய பயணத்தை தொடர்ந்திடுங்கள்.* மற்றவர் விமர்சிப்பதைப் பொருட்படுத்த வேண்டாம். ஏற்ற கொள்கையில் உறுதியுடன் இருங்கள்.* மனத்தூய்மை காப்பது, மற்றவர்களுக்கு நன்மை செய்வது இவையே ஆன்மிக வாழ்வின் அடையாளம்.-விவேகானந்தர்