வெற்றி வாழ்வின் ரகசியம்
* நன்மை செய்யவும், நல்லவர்களாக வாழவும் விரும்புபவர்களுக்கு உங்களால் இயன்ற உதவிகளைச் செய்யுங்கள்.* உண்மை எதற்கும் தலை வணங்கத் தேவையில்லை. மனித சமூகம் தான் உண்மைக்குத் தலை வணங்க வேண்டும். * எல்லாவிதமான அறிவும் மனிதனுக்குள்ளேயே இருக்கிறது. அதை விழித்து எழச் செய்வதே நல்லாசிரியரின் கடமை.* இன்றைய கல்வித்திட்டம் மனிதனை இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்கிறது. ஒழுக்கம், மனவலிமை, பரந்த அறிவு இவற்றை புகட்டுவதாக கல்வித்திட்டம் மாற வேண்டும்.* மனிதர்கள் விலங்குகளை விட அதிக ஒழுக்கமானவர்களாக இல்லை. சமுதாயக் கட்டுப்பாடு என்ற சாட்டையால் மனிதன் அடக்கி வைக்கப்பட்டிருக்கிறான். * கற்புநெறியில் இருந்து பிறழும் போது, மனித சமூகம் முடிவை நோக்கி நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது தெளிவாகும்.* நாம் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்வை அனுசரித்து அமைத்துக் கொள்வது தான் வெற்றி வாழ்வுக்கான ரகசியம். - விவேகானந்தர்