ஆதாரம் அன்பு ஒன்றே!
UPDATED : ஜூன் 20, 2014 | ADDED : ஜூன் 20, 2014
* அன்பே வாழ்வின் அடிப்படை ஆதாரம். ஆனால், மனிதனோ வெறுப்புணர்வால் உலகை நரகமாக்குகிறான். * மற்றவரை அடிப்பது எளிது. ஆனால், அடிக்காமல் அடங்கி இருப்பது கடினமானது. * ஒருவனிடத்தில் மறைந்திருக்கும் சக்தியை வெளிப்படுத்தும் செயல் தான் புண்ணியம். * மனம் விரும்பிய செயலில் நீங்கள் ஈடுபடுவது போல பிறரையும் சுதந்திரமாக செயல்பட அனுமதியுங்கள். * மனம் தான் உலகமாக விரிந்திருக்கிறது. எதையும் சரியாகப் பார்க்கக் கற்றுக் கொள்வது அவசியம். - விவேகானந்தர்