இது மகிழ்ச்சிக்கான வழி!
* ஞானம் என்பது மனிதனிடம் இயல்பாக இருக்கும் விஷயம். அது வெளியில் இருந்து வருவது கிடையாது.* தாயும் தந்தையும் வாழ்வில் மகிழ்ச்சி அடைந்தார்கள் என்றால் கடவுளும் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறார்.* அன்பின் மூலமாக செய்யப்படும் எந்தப் பணியும் இறுதியில் நிலையான மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.* தன்னைத் தானே மனிதன் வெறுக்கக்கூடாது. இல்லாவிட்டால் அழிவினுடைய வாசல்கள் அப்போதே திறந்து விடப்படும்.* பிறரிடம் பெற்றுக் கொள்வதால் பயனில்லை. மாறாக கொடுத்து மகிழ்பவனே பேறுபெற்றவன்.* தவறுகளைப் பெரும்பேறாக கருதிப் போற்றுங்கள். நம்மை அறியாமலேயே நமக்கு வழிகாட்டும் தெய்வங்கள் அவை தான்.* தன்னை மறந்து, மன ஒருமையுடன் செயலில் ஈடுபட்டால், அந்தப்பணி அழியாத சிறப்பை பெறும்.* போராட்டம் இல்லாத வாழ்வில் எந்தவிதமான சுவையும் இருப்பதில்லை. தோல்வியும் வெற்றிக்கான கதவுகளைத் திறந்தே விடுகிறது.- விவேகானந்தர்