உள்ளூர் செய்திகள்

பணம் சேர்ப்பது எப்படி?

* வெறும் பகட்டின் மூலம் சேர்த்த செல்வம் விரைவில் குறைந்து போகும். ஆனால் உழைப்பின் மூலம் சிறுகச் சேகரிப்பவனோ செல்வத்தை பெருக்குவான்.* பொய் சொல்லி திரட்டும் செல்வமானது, சாகப் போகிறவன் அங்குமிங்கும் புரண்டு மூச்சு விடுவதற்கு சமமானது (அது அழிந்து விடும்).* செல்வம் நிலையானதல்ல. கிரீடங்கள் தலைமுறை தலைமுறையாக நிலைத்து வருவதில்லை. செல்வத்தை மனிதன் குவிக்கலாம். ஆனால் அவற்றை யார் வாரிக்கொள்வார் என்பது தெரியாமலேயே சம்பாதிக்கிறான்.* எறும்பைக் காணுங்கள். அதன் வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். அதற்கு வழிகாட்டியும், தலைவனும், அதிகாரியும் இல்லை. கோடைகால ஆகாரத்திற்கு அறுவடை காலத்திலே தானியத்தை சேர்த்து வைக்கிறது. ஆனால் சோம்பேறிகள் கீல் முனையில் கதவு ஆடுவதைப் போல ஆடிக்கொண்டிருக்கிறார்கள். எறும்பு போல் உழைத்து சம்பாதியுங்கள்.