சாபத்திற்கு ஆளாகும் ஆறு குழுவினர்!
UPDATED : ஜூன் 02, 2015 | ADDED : ஜூன் 02, 2015
''ஆறு குழுவினரை நான் சபிக்கின்றேன். ஏனெனில் அல்லாஹ் அவர்களை சபிக்கின்றான்,'' என்று சாபத்திற்கு ஆளாபவர்களைப் பற்றி நபிகள் நாயகம் குறிப்பிடுகிறார்.* அல்லாஹ்வின் குர்ஆன் கருத்துக்களை திரித்து அதிகப்படுத்துபவர்.* அல்லாஹ்வின் கத்ரை (விதித்த விதி) பொய்ப்படுத்துபவர்.* அடக்குமுறையாக ஆட்சியைப் பெறுபவர்.* ஹரம் ஷரீபை (மெக்காவில்உள்ள முகர்ரமாவில் வேட்டையாடுதல், மரங்களை வெட்டுதல் போன்ற தடை செய்யப்பட்ட செயல்கள்) ஹலாலாக (நியாயம்) கருதுபவர்.* என்னுடைய சந்ததியினர்களில் அல்லாஹ் ஹராம் (நியாயமற்றது) ஆக்கியதை ஹலாலாக கருதுபவர்.* எனது வழிமுறைகளை விட்டு விலகியிருப்பவர். இந்த ஆறு பிரிவினரும் இறைவனின் சாபத்திற்கு ஆளாவார்கள்.