சிந்தித்து தொடங்குங்கள்
UPDATED : நவ 03, 2022 | ADDED : நவ 03, 2022
* எந்தச்செயலை செய்தாலும் அதை கருத்துான்றிச் சிந்தித்துச் தொடங்குங்கள். பாதி வெற்றியை அடைந்து விட்டீர்கள் என்பது பொருள்.* உண்மையாக நற்செயல் புரியுங்கள். அவற்றினால் பிறரும் மேன்மை அடைவார்கள். * ஒருவரை தீயபழக்கம் தொற்றிக்கொண்டால் அவர் இறக்கும் வரை விடுவதில்லை அதில் மறந்தும் கூட ஈடுபடாதீர்.* உருவங்களையும் செல்வங்களையும் பார்ப்பதில்லை. உள்ளங்களையும் செயல்களையும் பார்க்கிறான் இறைவன். * பெரியோர்களுக்கு மரியாதை செலுத்துங்கள். * வீட்டிற்கு வரும் விருந்தினரை அன்போடு கவனியுங்கள்.* பிறரிடம் உண்மையாக நடந்து கொள்ளுங்கள். நீங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்படுவீர்கள்.- பொன்மொழிகள்