உள்ளூர் செய்திகள்

நல்வாழ்வு தரும் போதனைகள்

* மலர்ந்த முகத்துடன் எப்போதும் இருங்கள்! அவர்களை இறைவன் நேசிக்கிறான். கடுகடுத்த முகமுடையவர்களை அவன் வெறுக்கிறான்.* இறந்து விட்ட அன்பர்களுக்காக தர்மம் செய்யுங்கள். வானவர்கள் அதன் நன்மைகளைச் சுமந்து சென்று அவர்களிடம் சேர்ப்பார்கள். இதனால் இறந்தவர்கள் 'எங்களின் மண்ணறையை ஒளிவாக்கிய பிள்ளைகளுக்கு பாவமன்னிப்பு அளிப்பாயாக இறைவா!' என பிரார்த்தனை செய்வார்கள். இல்லாவிட்டால் 'நாங்கள் விட்டுச் சென்ற செல்வங்கள், சொத்துக்களை அனுபவித்து விட்டு எங்களை மறந்தவர்களுக்கு சாபம் உண்டாகட்டும்,” என்று சபிப்பார்கள்.* பார்வையற்றவர்களுக்கு உதவி செய்பவர்களின் நுாறு குற்றங்கள் மன்னிக்கப்படும்.* அதிகமான துாக்கம் உள்ளத்தை மரணிக்கச் செய்யும். அதனால் கவலைகள் உண்டாகும்.* உங்கள் செல்வங்களைக் கண்டு சந்தோஷப்படாதீர்கள். மற்றவர்கள் பொருள் மீது ஆசைப்படாதீர்கள். இறைவன் இவர்களைக் கண்டு மகிழ்ச்சி அடைவதில்லை.- நபிகள் நாயகம்