சாப்பிடும் போது...
UPDATED : ஆக 17, 2018 | ADDED : ஆக 17, 2018
சாப்பிடும் முறை குறித்து நாயகம் கூறியுள்ள கருத்துக்கள் * உணவு வைக்கப்பட்டால் உங்களின் செருப்புகளை கழற்றி விடுங்கள். அது உங்களின் பாதங்களுக்கு இன்பம் தரும். * உங்களின் யாராகிலும் தம் இடது கையால் உண்பதும், தண்ணீர் பருகுவதும் கூடாது. ஏனென்றால் ஷைத்தான் தன் இடது கையாலேயே குடிக்கிறான். உணவு உண்கிறான்.* எல்லோரும் ஒன்று கூடி உண்ணுங்கள். பிரிந்து விடாதீர்கள். ஒன்று கூடி இருப்பதில் தான் சொர்க்கம் இருக்கிறது.