உள்ளூர் செய்திகள்

நறுமணம் வீசுதே...

றைவன் தன் ஆன்மாவை அமானிதமாக (ஒப்படைத்த பொருள்) மனிதனுக்கு கொடுத்திருக்கிறான். இந்த ஆன்மாவை பாதுகாத்து திரும்ப அவனிடமே ஒப்படைப்பது மனிதனின் கடமை. கெட்டவன் ஒருவன் இறந்தால் மரணத்திற்கு பின் அவனது உயிரை எடுத்துச் செல்லும் போது வானவர்கள், 'துர்நாற்றம் வீசுகிறதே. இந்த ஆன்மாவிற்கு இங்கு இடமில்லை. அதை பூமியிலேயே விட்டு வாருங்கள்' எனத் தெரிவிப்பர். இதற்கு காரணம் ஆன்மாவை அசுத்தப்படுத்தி விட்டான் அந்த மனிதன். இதுவே நல்ல ஆன்மா வானத்தை நெருங்கும் போது வானவர்கள், 'எங்கிருந்து நறுமணம் கமழ்கிறது' என வரவேற்பு கொடுப்பர். மரணத்திற்கு பின்னால் இந்த நிலையை அனைவரும் எதிர்கொள்ள வேண்டும். எனவே நற்செயல்களை செய்து ஆன்மாவை நறுமணம் வீசச் செய்வது அவசியம்.