குடும்பத்தைக் கவனி
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
ஒருவர் தினமும் இறைப்பணிகளில் ஈடுபடுகிறார். ஆனால் அவர் குடும்பத்தை கவனிக்கவில்லை என்றால் அது உண்மையான தொண்டாகுமா? இல்லை. தொழுகையை முடித்ததும் வாழ்வுக்கான ஆதாரங்களை தேடுங்கள். உங்களின் ஆற்றல் முழுவதையும் நல்வாழ்வு தேடும் முயற்சிக்காக செலவிடுங்கள். சுயதேவைக்காக பிறரைச் சார்ந்திருக்கக் கூடாது. குடும்பத்தினரின் தேவையை நிறைவேற்றாமல் இருப்பது நல்லதல்ல. எனவே முதலில் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்.