திடமான நம்பிக்கை
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
இறை நம்பிக்கை இருப்பவனுக்கு ஒருவேளை உணவாக காய்ந்த ரொட்டித் துண்டு கிடைத்தாலும் கையில் உலகமே கிடைத்தது போல மகிழ்ச்சி அடைவான். துன்பத்தில் சிரமப்பட்டாலும் அவர்களின் மனம் இன்பத்தில் மிதக்கும். இதற்கு காரணம் என்ன தெரியுமா?இறைவன் விரும்பாத எந்த துன்பமும் தன்னை நெருங்காது என்ற திடமான நம்பிக்கை கொண்டிருப்பர். அவனுடைய கட்டளையின் படியே தன் வாழ்வு நடக்கிறது; அதற்குரிய பரிகாரமும் அவனிடமே இருக்கிறது என நம்புவர். வெளி உலக இன்பமோ, துன்பமோ அவர்களை பாதிக்காது.