நன்மையை நாடுங்கள்
UPDATED : ஆக 28, 2025 | ADDED : ஆக 28, 2025
'தேவை போக மீதியுள்ள பணத்தை செலவு செய். அதை உனக்கென சுயநலத்துடன் வைத்துக் கொண்டால் தீமை உண்டாகும். யாருக்கு செலவழிக்க கடமை உள்ளதோ அவர்களுக்காக செலவு செய்' என்கிறது பொன்மொழி. உறவினர், நண்பர்களின் தேவையறிந்து உதவுங்கள். ஆதரவின்றி வாடுவோருக்கு உணவிடுங்கள். எப்போதும் தர்மவழியில் செலவழித்து நன்மையை நாடுங்கள்.