உண்மையாளர்
மனித இனத்திற்கு வழிகாட்ட வந்த இறை துாதர்கள் நபிமார்கள் எனப்படுவர். இவர்களில் 'ஹஜ்ரத் ஈஸா' விண்ணுலகிற்கு சென்று 600 ஆண்டுகளாகியும் எந்த நபியையும் அவன் அனுப்பவில்லை. இதனால் பாவச் செயல்களில் மக்கள் ஈடுபடத் தொடங்கினர். அரேபியர்கள் மோசமான முறையில் வாழ்ந்தனர். விளையாட்டாக மற்றவர்களை கொல்வது, எப்போதும் போராடுவது, சாராயம் குடிப்பது, பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைப்பது என இருந்தனர்.இத்தகைய சூழலில் நபிகள் நாயகம் பூமியில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாயின் பெயர் ஹஜ்ரத் ஆமினா. பிறப்பதற்கு முன்பே தந்தையையும், ஆறாம் வயதில் தாயையும் இழந்தார். எட்டு வயது வரை பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் பொறுப்பிலும், சிறிய தந்தையான ஹஜ்ரத் அபூதாலிப் பராமரிப்பிலும் வளர்ந்தார். மக்கள் மத்தியில் செல்வாக்குடன் வாழ்ந்தார். இதனால் 'அல் அமீன்' (நம்பிக்கையாளர்), 'அஸ் ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் மக்களால் போற்றப்பட்டார்.