உள்ளூர் செய்திகள்

விசாரணை

குடும்பத்தில் மனைவி, குழந்தைகளை திருப்தியுடன் வாழ வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கு இருக்கிறது. பெற்றோரிடம் நல்லவிதமாக நடப்பதோடு மனைவிக்கும் நன்மை செய்பவராக மனிதன் இருக்க வேண்டும்.மனிதராக வாழும் ஒவ்வொருவரும் அவரவர் கடமை, பொறுப்பு குறித்து மறுமை நாளில் விசாரணை செய்யப்படுவர். ஆட்சி நடத்திய விதம் பற்றி நாடாளும் மன்னர் விசாரிக்கப்படுவார். பெண்ணே குடும்பத்தின் பொறுப்பாளர். கணவரின் நலன், குழந்தை வளர்ப்பு பற்றி அவள் விசாரிக்கப்படுவாள். எஜமானரின் சொத்திற்கு பொறுப்பாக இருப்பவன் பணியாளன். அவனுக்குரிய பொறுப்பு குறித்து மறுமை நாளில் அவனும் விசாரிக்கப்படுவான்.