உள்ளூர் செய்திகள்

மிலாடி நபி

நபிகள் நாயகத்தின் போதனையால் பாவச் செயல்களில் ஈடுபட்டவர்கள் நல்லவர்களாக திருந்தினர். இதனால் எங்கும் அமைதி, நிம்மதி நிலவியது. மனிதர்களை மனிதராக வாழச் செய்யவே, ஒரு லட்சத்து இருபத்து நான்கு ஆயிரம் நபிமார்களை இறைவன் அனுப்பி வைத்தான். இவர்களில் கடைசியாக வந்தவரே நபிகள் நாயகம். 63 வயது வரை வாழ்ந்த இவர் 632 ரபியுல் அவ்வல் மாதம் 12ல் இவ்வுலகை துறந்தார்.பிறந்ததும், இறந்ததும் ஒரே நாளில் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நாளையே மிலாடி நபி என கொண்டாடுகிறோம்.