மக்களின் கடமை
UPDATED : செப் 05, 2025 | ADDED : செப் 05, 2025
நபிகள் நாயகத்திற்கு வானவர் தலைவன் ஜிப்ரயில் மூலம் இறைவன் அருளியது 'குர்ஆன்'. அரபுச் சொல்லான இதற்கு ஓதப்பட்டது, ஓதக்கூடியது, ஓதவேண்டியது என பொருள். இதில் மனித குலத்திற்குத் தேவையான அம்சம் அனைத்தும் கூறப்பட்டுள்ளது. இதை ஓதுவது ஈமான் கொண்ட மக்களின் கடமை. நாயகத்தின் பொன்மொழிகள், செயல், அவர் அங்கீகரித்த செயல்கள் 'ஹதீஸ்' என்னும் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் குர்ஆன் விளக்கம், நபி காட்டிய வழியில் எப்படி செயல்படுவது என்பது பற்றி சொல்லப்பட்டுள்ளது. நாயகத்தின் வழிகாட்டுதலில் எந்தச் செயல் செய்தாலும் அதை 'சுன்னத்' என்பர்.