காத்திருக்கு நன்மை
                              UPDATED : அக் 30, 2025 | ADDED : அக் 30, 2025 
                            
                          
மக்களுக்கு அறிவுரை சொன்ன நபிகள் நாயகம், ''நீங்கள் விரும்பியதை அவனிடம் கேளுங்கள். துன்பத்தில் வாடும் போது இறைவனிடம் முறையிடுங்கள். எப்போதும் நன்மை உங்களுக்காக காத்திருக்கிறது. இதை விட்டு விட்டு 'நான் இப்படிச் செய்திருந்தால் அப்படி ஆயிருக்குமே. தப்பு செய்து விட்டேனே' என கலங்காதீர்கள். மாறாக 'அவன் கட்டளைப்படியே எல்லாம் நடக்கிறது' என தைரியமாகச் சொல்லுங்கள். இறை நம்பிக்கை கொண்டவர்கள் யாருக்காகவும், எதற்காகவும் வருத்தப்பட தேவையில்லை. அவனது அனுமதி இல்லாமல் எந்த துன்பமும் நெருங்காது'' என்றார்.