உள்ளூர் செய்திகள்

பிரமாண்டமான மரம்

வானத்தில் உள்ள பிரமாண்டமான மரத்தின் பெயரே 'ஸித்ரத்துல் முன்தஹா'. ஸித்ரத் என்றால் இலந்தை மரம். முன்தஹா என்றால் கடைசி எல்லை. அதாவது வானத்தின் விளிம்பில் உள்ள மரம் தான் இது. இதன் இலைகள் யானையின் காது போல் அளவில் பெரியதாக இருக்கும். அவை பச்சையாக இல்லாமல் பல நிறங்களின் கூட்டுக்கலவையாக பார்ப்பவரின் கண்ணைப் பறிக்கும்.