ஜகாத் அவசியம்
UPDATED : நவ 06, 2025 | ADDED : நவ 06, 2025
தேவைக்கும் அதிகமாக பணம் இருந்தாலும் சிலர் ஏழைவரி ஜகாத்தை கொடுக்க விரும்புவதில்லை. இவர்களின் நிலை மறுமை நாளில் என்னவாகும் தெரியுமா... கண்களின் மீது இரண்டு கரும்புள்ளிகள் உள்ள பாம்பாக மாற்றப்பட்டு அவருடைய கழுத்தில் மாலையாக போடப்படும். 'நீ பாதுகாத்த பொக்கிஷம் நான் தான்' எனச் சொல்லி அந்த பாம்பு விஷத்தை உமிழும். அதனால் ஜகாத்தை கொடுங்கள் என்கிறார் நாயகம்.