உள்ளூர் செய்திகள்

ஒழுக்கமே உயிர்

மனம், உடலை கட்டுப்பாடாக வைப்பது ஒழுக்கம். இது குழந்தைப் பருவம் முதலே பெற்றோர் சொல்லித் தர வேண்டும். இல்லாவிட்டால் வாழ்வில் உயர முடியாது. குழந்தைகள் வழிதவறும் போது, 'உங்க பையன் ஒழுங்கீனமாக நடக்குறான். அவனை கொஞ்சம் கவனிங்க' என மற்றவர்கள் புகார் சொல்வர். ஒழுக்கமின்மையால் வாழும் போது மட்டுமல்ல; இறந்த பிறகும் கூட தீமை ஏற்படும். எனவே ஒழுக்கத்தை உயிராக மதியுங்கள்.