உள்ளூர் செய்திகள்

தர்மத்தின் நோக்கம்

அலிரலி கூறிய செய்தி: ஒட்டகங்களை அறுத்துப் பலியிடும் பொறுப்பை கவனிக்க என்னை நியமித்தார் நபிகள் நாயகம். அப்போது அவர் கூறியதைக் கேட்டு ஆச்சரியப்பட்டேன். ஒட்டகத்தின் இறைச்சி, தோல் அனைத்தையும் தர்மம் செய்யுங்கள். அவற்றில் எதையும் உரிப்பவருக்கு கூலியாக கொடுக்காதீர்கள். தோலை உரிப்பவருக்கு கூலியாக பணத்தைத் தான் கொடுக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார்'' ஏழைகளுக்கு பொருள் சென்றடைய வேண்டும் என்பதே இதன் நோக்கம்.