உள்ளூர் செய்திகள்

பூங்காற்று திரும்புமா...

இன்று மனிதர்கள் ஓட்டமும், நடையுமாக எதையோ தேடி அலைகிறார்கள். அவர்களைப் போலத் தான் நீங்களும் என்றால் ஒரு நிமிடம் யோசியுங்கள். பள்ளிப்பருவம் முதல் இப்போது வரை எத்தனையோ பேர்களை நாம் பார்த்திருப்போம். அவர்களுடன் பழகி இருப்போம். ஆனால் நம் இளமைக்காலம் மீண்டும் திரும்ப வருமா? நாம் கடந்து வந்த பாதையில் பூங்காற்று போல கிடைத்த அனுபவம் மட்டுமே உண்மை. நட்பு, உறவு என பழகிய பலரும் நம்மை விட்டு விலகியிருக்கலாம். இல்லை. நிரந்தரமாக பிரிந்திருக்கலாம். எனவே அந்ததந்த தருணத்தை ரசிக்கப் பழகுங்கள். உண்மையான மகிழ்ச்சி அதுவே.