உள்ளூர் செய்திகள்

சிறந்த தர்மம்

ஒரு மனிதன் விலக்கப்பட்ட வழியில் பணம் சம்பாதிக்கிறான். அதில் இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் ஏற்றுக் கொள்ளப்படாது. தனக்காகவும், தன் வீட்டாருக்காகவும் செலவிட்டாலும் அந்த பணம் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். ஒருவேளை அவன் இறந்துவிட்டால் அவனது நரகப் பயணத்திற்கு காரணமாக அது இருக்கும். தீமையை தீமையின் வாயிலாக அழிக்க முடியாது. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கலாம். அசுத்தம் இன்னொரு அசுத்தத்தை அழிப்பதில்லை. நல்ல வழியில் சம்பாதித்த பணத்தில் ஒரு ரூபாய் தர்மம் செய்ய முடிந்தாலும் அதுவே சிறந்தது.