உள்ளூர் செய்திகள்

திருப்பிக்கொடுங்கள்

'ஆரியா' நிறைவேற்றப்படும். 'மின்ஹா' திருப்பித் தரப்படும். 'கடன்' திரும்பக் கொடுத்து விடப்படும். பிணையேற்பவன் பிணையை பொறுப்புடன் நிறைவேற்றுவான் என்கிறார் நபிகள் நாயகம். 1. ஆரியா என்றால் 'இரவல் வாங்கப்பட்ட பொருள்'. எவரிடமிருந்தாவது ஒரு பொருளை கடனாக பெற்றால், அதை திருப்பித் தர வேண்டும். 2. மின்ஹா என்றால் 'இரு திமிள்களைக் கொண்ட பெண் ஒட்டகம்'. அரபுநாட்டில் செல்வந்தர்கள் தன் நண்பர், உறவினர்களுக்கும் 'பாலைக் கறந்து பயன்படுத்திக் கொள்ளலாம்' என பெண் ஒட்டகங்களை கொடுப்பர். அப்படி பெற்றுக் கொள்பவர் அந்தப் பிராணியின் பால் வற்றியவுடன் உரிமையாளரிடம் கொடுத்துவிட வேண்டும். 3. வாங்கிய கடன் அடைக்கப்பட வேண்டும். அதை தராமல் இழுத்தடிக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. 4. யாருக்காவது (ஒரு தொகைக்கு அல்லது பொருளுக்கு) ஒரு மனிதர் உத்திரவாதம் அளித்திருந்தால், அம்மனிதரிடம் இருந்து (உத்திரவாதம் ஏற்கப்பட்ட தொகை அல்லது பொருள்) வசூலிக்கப்படும்.