பிறந்தார் நபிகள் நாயகம்
இறைவனின் துாதர்களான நபிமார்கள் மனித இனத்துக்கு வழி காட்ட வந்தவர்கள். இவர்களில் 'ஹஜ்ரத் ஈஸா' விண்ணுலகிற்கு சென்று 900 ஆண்டுகளாகியும், எந்த நபியையும் அவன் அனுப்பவில்லை. இதனால் மக்கள் பாவங்களை செய்து வந்தனர். இதில் மோசமான முறையில் வாழ்ந்தனர் அரபிகள். விளையாட்டிற்காக மனிதர்களை கொல்வது, எப்போதும் போராடுவது, பிறந்த பெண் குழந்தையை உயிருடன் புதைப்பது என பாவங்களில் ஒன்றைக்கூட விடாமல் செய்தனர். இத்தகைய சூழலில்தான் நபிகள் நாயகம் 570 ஆகஸ்ட் 12 அன்று அதிகாலை மெக்கா நகரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ஹஜ்ரத் அப்துல்லாஹ். தாயின் பெயர் ஹஜ்ரத் ஆமினா. இவர் பிறப்பதற்கு முன்பாகவே தந்தையையும், ஆறாம் ஆண்டில் தாயையும் இழந்தார். எட்டு வயது வரை பாட்டனார் ஹஜ்ரத் அப்துல் முத்தலிப் பொறுப்பில் வாழ்ந்தார். பிறகு சிறிய தந்தையரான ஹஜ்ரத் அபூதாலிப் பராமரிப்பில் வாழ்ந்தார். மக்களிடையே மிகவும் செல்வாக்காக இருந்தார். இதனால் இவரை, 'அல் அமீன்' (நம்பிக்கையாளர்), 'அஸ் ஸாதிக்' (உண்மையாளர்) என்றும் பாராட்டினர்.