சிவன் ஏன் அழிப்பவர் என்று அழைக்கப்படுகிறார்?
மக்கள் பொதுவாக பாதுகாப்பு மற்றும் வளமைக்காக தெய்வீகத்தை அணுகுகிறார்கள், ஆனால் யோக கலாச்சாரத்தில், சிவன் அழிப்பவராக வணங்கப்படுகிறார். இந்த விசித்திரமான அணுகுமுறையின் பின்னால் உள்ள ஞானத்தைக் கண்டறிவோம்.கேள்வியாளர்: யோகாவின் முழு நோக்கம் முக்தி அல்லது விடுதலை என்று நான் நினைத்தேன், ஆனால் சிவன் என்ற ஆதியோகி, அழிப்பவன் என்று ஏன் அறியப்படுகிறார்? அவர் எதை அழிக்க முயற்சிக்கிறார்?சத்குரு: வேறொரு உயிர் மற்றொரு கிரகத்திலிருந்து வருகிறது என்று யாராவது சொன்னார்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன நினைப்பீர்கள்? 'ஒருவேளை அவருக்கு எட்டு கைகள் இருக்கலாம். அல்லது அவர் ஒரு நாய் போல அல்லது ஒரு யானை போல இருப்பாரா? ” உங்களுடைய அனைத்து சிந்தனை செயல்முறைகளும் நீங்கள் இதுவரை அனுபவித்தவற்றிலிருந்து மட்டுமே உருவாகிறது. எனவே நாம் முக்தி அல்லது விடுதலை என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம், ஏனென்றால் நாம் இதுவரை அனுபவிக்காததை நம்மால் அறிய முடியாது.சிவன் என்ற அழிப்பவரின் முக்கியத்துவம்முதலில் பிணைப்பு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வோம். பிணைப்பு என்றால் என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டு அதை அகற்றுவதற்க்கு உழைத்தால், அதுதான் விடுதலை. ஒரு விதத்தில், ஆன்மீக செயல்முறை ஒரு எதிர்மறை வேலை. அதனால்தான், இந்தியாவில், நாம் எப்போதும் சிவனை அழிப்பவராக வழிபடுகிறோம், ஏனென்றால் அது உங்களை அழித்துவிடும் ஒரு வழியாகும். நீங்கள் இப்போது உங்களை என்னவாகக் கருதுகிறீர்களோ - ஓரு மனிதனாக குறுகிய வடிவத்தில் உங்களை நீங்களே உருவாக்கிய விகிதம் - நீங்கள் அதை அழிக்க முடிந்தால், அதுதான் விடுதலை.உங்கள் தனித்தன்மை அனைத்தும், உங்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, எதை நீங்கள் நம்புகிறீர்களோ, அது உடலுக்கும் மனதுக்கும் உள்ள ஆழ்ந்த அடையாளத்தால் மட்டுமே உங்களிடம் வந்துள்ளது. இந்த அடையாளம் மிகவும் வலுவானது, ஏனென்றால் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கும் ஒரே வழி ஐம்புலன்களின் மூலமாக மட்டுமே. இந்த ஐம்புலன்கள் உறங்கச் சென்றால், நீங்களோ அல்லது இந்த உலகமோ உங்கள் அனுபவத்தில் இல்லை.இப்போது, உங்களைச் சுற்றியுள்ள உலகத்தையும் உங்களுக்குள் இருப்பதையும் அனுபவிக்க உங்கள் உணர்வுகளின் குறுகிய அனுபவம் மட்டுமே ஒரே வழியாக இருக்கிறது. எனவே உங்கள் முதல் வேலை உடல் மற்றும் மனதுடன் அடையாளம் காண்பதை நிறுத்த வேண்டும், அதைத்தான் யோகா செய்கிறது. யோகாவின் முதல் படி எப்போதுமே உணர்வுகளை கடப்பது பற்றியது. உணர்வுகளுக்கு அப்பால் நீங்கள் வாழ்க்கையை அனுபவிக்கத் தொடங்கியவுடன், இயற்கையாகவே உடலையும் மனதையும் அடையாளம் காண்பது மெதுவாக பின்னோக்கிச்சென்று மறைந்துவிடும்.