உள்ளூர் செய்திகள்

சகலகலா வல்லவர்!

'இவருக்குள் பல திறமைகள் கொட்டிக் கிடக்கும்போலிருக்கிறதே...' என, மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமானசுரேஷ் கோபியை பார்த்து ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள். சுரேஷ் கோபி, பிரபலமலையாள நடிகர். பெரும்பாலும், போலீஸ் வேடங்களிலேயே நடிப்பார்; சண்டை காட்சிகளில்ஆக்ரோஷமான நடிப்பை வெளிப்படுத்துவார்.சினிமாவில் மார்க்கெட்குறைந்ததும், அரசியல் பக்கம் ஒதுங்கினார். கடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில்திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கேரளாவில் பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு இல்லை. ஆனாலும், சுரேஷ் கோபி வெற்றி பெற்றதால், கட்சி தலைமை அவரை மத்திய சுற்றுலா துறை இணை அமைச்சராக்கியது.சமீபத்தில், ஆந்திராவின் விஜயவாடா நகரில், மத்திய அரசின் சுற்றுலா துறை சார்பில் ஆன்மிக கலாசார நிகழ்ச்சி நடந்தது. இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சுரேஷ் கோபி, மலையாளம், தெலுங்கு, தமிழ் மொழிகளில்சரளமாக பக்திப் பாடல்களை பாடி,பார்வையாளர்களை அசர வைத்தார்.தாளம் தப்பாமல், சுருதி பிசகாமல் சுரேஷ் கோபி பாடியதை பார்த்து, அங்கிருந்த இசைக் கலைஞர்களே ஆச்சரியப்பட்டனர். 'நடிகர், அரசியல்வாதி, பாடகர் என பல அவதாரங்கள் எடுக்கும் சுரேஷ் கோபி, உண்மையிலேயே சகலகலா வல்லவர் தான்...' என பாராட்டுகின்றனர், சக அரசியல்வாதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ