உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  பயம் வந்து விட்டதா?

 பயம் வந்து விட்டதா?

'அடக்கி வாசிக்க வேண்டிய நேரம் இது என, இப்போது உணர்ந்து விட்டார் போலிருக்கிறது...' என, மஹாராஷ்டிரா துணை முதல்வரும், தேசியவாத காங்கிரசை சேர்ந்தவருமான அஜித் பவாரைப் பற்றி பேசுகின்றனர், இங்குள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர். மஹாராஷ்டிராவில், பா.ஜ.,வைச் சேர்ந்த முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்., கூட்டணி அரசு நடக்கிறது. துணை முதல்வராக, தேசியவாத காங்., தலைவர் அஜித் பவார் பொறுப்பு வகிக்கிறார். சமீப காலமாகவே, அஜித் பவார் மற்றும் அவரது கட்சியினர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இந்நிலையில், அஜித் பவாரின் மகன் பார்த் பவாரின் நிறுவனத்திற்கு, புனேவில் உள்ள, அரசுக்கு சொந்தமான, 40 ஏக்கர் நிலம், விதிகளை மீறி விற்கப்பட்டுள்ளதாக, புதிய பூதம் கிளம்பியுள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தை பெரிதாக்கி, போராட்டங்களை நடத்துவதால், பட்னவிஸ் தலைமையிலான கூட்டணி அரசுக்கு, நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 'ஆளும் கூட்டணியில் அங்கம் வகிப்பதால், அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக எங்கள் மீது புகார் கூறப்படுகிறது. நாங்கள் மக்களை எப்போதும் மதிக்கிறோம். முறைகேடுகளில் ஈடுபட்டால், அடுத்த தேர்தலில் மக்கள் எங்களை துாக்கி எறிந்து விடுவர் என்பது நன்றாகவே தெரியும்...' என, விளக்கம் அளித்துள்ளார், அஜித் பவார். எதிர்க்கட்சியினரோ, 'இப்போதாவது மக்களை நினைத்து, பயம் வந்ததே...' என, கிண்டலடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை