உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / உஷாரான முதல்வர்!

உஷாரான முதல்வர்!

'இப்போதுள்ள அரசியல்வாதிகள் விபரமானவர்களாகத் தான் இருக்கின்றனர்...' என ஆச்சரியப்படுகின்றனர், வடகிழக்கு மாநிலமான மேகாலயா மக்கள்.நாட்டின் மற்ற மாநிலங்களில் நடக்கும்அரசியல் செயல்பாடுகள், மக்களின் பார்வைக்கு வெளிப்படையாக தெரிந்தாலும்,வடகிழக்கு மாநிலங்களில் நடக்கும் அரசியல் அவ்வளவாகதெரிவது இல்லை.'மற்ற மாநிலங்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் இல்லை' என்று சமீபகாலமாக நிரூபித்து வருகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள். மேகாலயாவில், முதல்வர் கன்ராட் சங்மா தலைமையிலான, தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி நடக்கிறது. மத்தியில் முந்தைய காங்., ஆட்சி காலத்தில் லோக்சபா சபாநாயகராக இருந்து, மறைந்த பி.ஏ.சங்மாவின் மகன் தான் கன்ராட் சங்மா.தந்தைக்கு பின், மேகாலயா அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் இங்கு நடந்த இடைத்தேர்தலில், சத்தமில்லாமல் தன் மனைவி மெஹ்தாப் சந்தே சங்மாவை நிறுத்தி, வெற்றி பெற வைத்துள்ளார்.ஏற்கனவே, கன்ராட்டின் சகோதரி அகதா சங்மா, தீவிர அரசியலில் உள்ளார். இவரது சுறுசுறுப்பான செயல்பாடுகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால், எதிர்காலத்தில் தன் பதவிக்கு ஆபத்து ஏற்படுமோ என கலக்கம் அடைந்துள்ள கன்ராட் சங்மா, தன் மனைவியையும் அரசியலில் இறக்கி விட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்.'சகோதரியால் ஏற்படும் ஆபத்தை, மனைவியை வைத்து முறியடிக்க திட்டமிட்டு உஷாராக காய் நகர்த்தி வருகிறார் கன்ராட் சங்மா...' என்கின்றனர், மேகாலயா மக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ