வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ராகுல் படம் போஸ்டரில் இருந்தால் பீஹார் மக்கள் அவர்களுக்கு ஓட்டுப்போடமாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவிற்கு தெரியும். எனவே ராகுலின் படமோ அல்லது அவருடைய இத்தாலி அம்மாவின் பெயரையோ அவர் போடவில்லை போலும்.
'மழை விட்டும் துாறல் விடாத கதையாக இருக்கிறதே...' என கவலையில் ஆழ்ந்துள்ளனர், பீஹாரில் உள்ள காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட, 'இண்டியா' கூட்டணி கட்சியினர். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. எதிர்க்கட்சி தரப்பிலான, 'இண்டியா' கூட்டணியில், முதல்வர் வேட்பாளர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நீடித்ததால், அந்த கூட்டணியில் இணக்கம் ஏற்பட வில்லை என, பரவலாக பேச்சு எழுந்தது. இந்நிலையில், சமீபத்தில் இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவின் பெயர் அறிவிக்கப்பட்டது. இதற்கான செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில், தேஜஸ்வி மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் பங்கேற்றனர். பின்னணியில் வைக்கப்பட்டிருந்த பேனரில், தேஜஸ்வி யாதவின் படம் மட்டுமே இடம் பெற்றிருந்தது; காங்கிரஸ் தலைவர்களான ராகுல், சோனியா ஆகியோரின் படங்கள் இல்லை. இதையடுத்து, 'ராகுலின் படத்தை பேனரில் வைப்பதில் தேஜஸ்விக்கு என்ன பிரச்னை...?' என, காங்கிரஸ் கட்சியினர் ஆவேசப்பட்டனர். பீஹார் மக்களோ, 'ஓட்டுப் பதிவு நாள் வரை, கூட்டணியில் குழப்பம் நீடித்தால், அப்புறம் எப்படி இவர்களால் வெற்றி பெற முடியும்...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.
ராகுல் படம் போஸ்டரில் இருந்தால் பீஹார் மக்கள் அவர்களுக்கு ஓட்டுப்போடமாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவிற்கு தெரியும். எனவே ராகுலின் படமோ அல்லது அவருடைய இத்தாலி அம்மாவின் பெயரையோ அவர் போடவில்லை போலும்.