உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் /  கண்டிக்க முடியவில்லையே!

 கண்டிக்க முடியவில்லையே!

'அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்துவதே, இந்த அமைச்சர்களுக்கு வேலையாகி விட்டது...' என கவலைப்படுகிறார், காங்கிரஸ் கட்சியின் கேரள முதல்வரான சதீஷன். கேரளாவில், முதல்வர் சதீஷன் தலைமையில் நடக்கும் ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணி அரசில், பல்வேறு கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில், கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சி.பி.ஜான், போக்குவரத்து துறை அமைச்சராக உள்ளார். இந்த கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டில் இருந்து, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து உருவானது. கேரளாவில், அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமலில் உள்ளது. இது குறித்து, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜான், 'கேரள பெண்களை புரிந்து கொள்ளவே முடியவில்லை. இலவசம் என்பதால், அரசு பஸ்களில் அடித்துப் பிடித்து, கும்பல் கும்பலாக பயணிக்கின்றனர் 'அதேநேரத்தில், தங்கள் குழந்தைகளை, தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுத்து சேர்க்கின்றனர். பணக்கார பெண்கள், இலவசத்துக்காக தங்களை ஏழைகளைப் போல் காட்டிக் கொள்கின்றனர்...' என்றார். உடனே, 'பெண்களை அவமதிக்கும் விதமாக அமைச்சர் ஜான் பேசி விட்டார்...' என, எதிர்க்கட்சியினர் கொந்தளித்தனர். இதனால், 'நான் பேசியது, யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்; இதை பெரிதுபடுத்தி, அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்...' என விளக்கம் அளித்துள்ளார், ஜான். முதல்வர் சதீஷனோ, 'கூட்டணி அரசில் இந்த அமைச்சர்களை கண்டிக்க முடியவில்லையே' என, புலம்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை