மேலும் செய்திகள்
தொலைநோக்கு திட்டம்?
10-Mar-2026
'பாவம்... அவரை அரசியல் செய்ய விடாமல் முடக்கி விட்டனரே...' என, ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது கட்சி நிர்வாகிகள். ஆந்திராவில், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி நடக்கிறது; இதற்கு முன், ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவி வகித்தார். இவர், ஆந்திர முன்னாள் முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன். 2024ல் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியை பறிகொடுத்ததும், அவரது தாயார் விஜயம்மாவும், சகோதரி ஷர்மிளாவும் ஜெகனுக்கு எதிராக கை கோர்த்தனர். ஷர்மிளா, இப்போது ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராகி விட்டார். தன் சகோதரர் ஜெகனை தொடர்ந்து கடுமையாக தாக்கிப் பேசி வருகிறார்; இவருக்கு பக்க பலமாக இருப்பவர், அவரது தாயார் விஜயம்மா. இது குறித்து, ராஜசேகர ரெட்டி குடும்பத்துக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், 'இவர்களது மோதலுக்கு, அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை . ராஜசேகர ரெட்டியின் பல நுாறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை கைப்பற்றுவதற் காகத் தான், சண்டை போடுகின்றனர்...' என்கின்றனர். 'இந்த குடும்ப சண்டையில், அரசியல் பணிகளே ஜெகன்மோகனுக்கு மறந்து விட்டது. ஊர் இரண்டு பட்டால், கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல், சந்திரபாபு நாயுடு உற்சாகத்தில் இருக்கிறார்...' என்கின்றனர், ஆந்திர மக்கள்.
10-Mar-2026