உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / முடக்க முன்னோட்டம்!

முடக்க முன்னோட்டம்!

'முதல் நாளே புகார் பட்டியலை வாசிக்கத் துவங்கி விட்டாரே...' என, காங்கிரஸ் எம்.பி.,யும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் பற்றி கூறுகின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள். பெரும் எதிர்பார்ப்புகளுக்கும், பரபரப்புகளுக்கும் இடையில் பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியுள்ளது. ஒவ்வொரு கூட்டத்தொடரிலும், ஏதாவது ஒரு பிரச்னையை கிளப்பி, அமளி, கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்தி, சபையை முடக்குவதை எதிர்க்கட்சியினர் வாடிக்கை யாக வைத்துள்ளனர். இதனால், சபையின் நேரம் வீணடிக்கப் படுவதாக விமர்சனங்கள் எழுந்தாலும், எதிர்க்கட்சியினர் அதை பொருட்படுத்துவது இல்லை. தற்போது துவங்கியுள்ள கூட்டத் தொடராவது அமளியின்றி, பயனுள்ள வகையில் நடக்குமா என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வழக்கம் போலவே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் முதல் நாளிலேயே அமளி, வெளிநடப்பு என ஆரம்பித்து விட்டனர். லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான ராகுல், முதல் நாள் வெளிநடப்பு செய்த பின், பார்லிமென்டிற்கு வெளியில் வந்து, 'மத்திய அமைச்சர்கள், ஆளும் கூட்டணியில் உள்ள எம்.பி.,க்களுக்கு எல்லாம் சபையில் பேச வாய்ப்பு அளிக்கின்றனர். 'ஆனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான எனக்கு, பேச வாய்ப்பு தராமல் ஜனநாயகத்தை முடக்குகின்றனர். பார்லிமென்டில் மக்கள் பிரச்னைகளை பேசுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது...' என, பேட்டி அளித்தார். பா.ஜ.,வினரோ, 'இந்த கூட்டத்தொடரையும் முழுமையாக முடக்க முடிவு செய்து விட்டனர் போலிருக்கிறது. அதற்கு முன்னோட்டமாகத் தான், ராகுலின் பேட்டி அமைந்துள்ளது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை