உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘ஆசிரியர்களை பகைக்கலாமா?’

‘ஆசிரியர்களை பகைக்கலாமா?’

‘பெரிய பொறுப்பில் இருக்கும் போது, எதையும் நிதானமாகத் தான் பேச வேண்டும் என்பது, இவருக்கு தெரியாமல் போய் விட்டதே...’ என, கர்நாடக மாநில முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவகுமார் பற்றி கவலைப்படுகின்றனர், அவரது கட்சியினர். கர்நாடக முதல்வராக சிவகுமார் பதவியேற்று ஆறு மாதங்களாகி விட்டன. அதற்குள், அவரைச் சுற்றி ஏராளமான பிரச்னைகள் உருவெடுத்து விட்டன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சிவகுமாரின் மகள் ஐஸ்வர்யா, ‘நம் மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவது இல்லை. லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள், ஒழுங்காக பணிக்கு வருவது இல்லை...’ என்றார். தொடர்ந்து பேசிய சிவகுமார், ‘அரசு பள்ளி ஆசிரியர்கள், 1.5 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் பெறுகின்றனர்; ஆனாலும், பொறுப்பில்லாமல் செயல்படுகின்றனர். நான் எல்லா ஆசிரியர்களையும் சொல்லவில்லை; ஒரு சிலரை மட்டும் தான் குற்றஞ்சாட்டுகிறேன்...’ என்றார். தந்தையும், மகளும் இவ்வாறு பேசியது, அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ., போன்ற எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்து, போராட்டத்துக்கு தயாராகி வருகின்றன. காங்., கட்சியினரோ, ‘தேர்தல் பணிகளில் பெரும் பங்காற்றுவதே, அரசு பள்ளி ஆசிரியர்கள் தான்; அவர்களை போய் பகைத்து கொள்ளலாமா...’ என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை