உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வாய்க்கு எட்டாதோ?

வாய்க்கு எட்டாதோ?

'எப்படியாவது ஆட்சியை பிடித்து விடலாம் என நினைத்தால், கடைசி நேரத்தில் இப்படி சிக்கல் வருகிறதே...' என கவலைப்படுகின்றனர், ஹரியானா மாநில காங்கிரஸ் கட்சியினர். இங்கு, முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. கடந்த 10 ஆண்டு களாக பா.ஜ.,தான் இங்கு ஆட்சியில் உள்ளது. அடுத்த மாத துவக்கத்தில் இங்கு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. விவசாயிகள் போராட்டம் காரணமாக பா.ஜ.,வின் செல்வாக்கில் தற்போது பின்னடைவு ஏற்பட்டுள்ளது.இதனால், ஆட்சியை பிடிப்பதற்காக காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக களம் இறங்கியுள்ளனர். மல்யுத்த வீரர்களை வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது, காங்கிரஸ். இதனால், 'வெற்றி கைக்கு எட்டும் துாரம் தான்...' என, காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்ப்புடன் இருந்தனர்.ஆனால், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமின் வடிவத்தில், காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.டில்லியை ஒட்டியுள்ள ஹரியானாவில், ஆம் ஆத்மிக்கும் கணிசமான செல்வாக்கு உள்ளது. 'கெஜ்ரிவால் சிறையில் இருந்தால், அவர் பிரசாரத்துக்கு வரமாட்டார். ஓட்டுகள் பிரியாது. எளிதில் வெற்றி பெற்று விடலாம்' என, காங்., கட்சியினர் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனால், கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கிடைத்து விட்டது. ஹரியானா தேர்தலுக்கு பிரசாரம் செய்யவும் முடிவு செய்துள்ளார். இதனால், இங்குள்ள காங்., தலைவர்கள், 'கைக்கு எட்டியது, வாய்க்கு எட்டாது போலிருக்கிறதே...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி