மேலும் செய்திகள்
அலப்பறைக்கு அளவில்லையா?
24-Jan-2025
'அரசியலுக்கு நேற்று வந்தவர்கள் எல்லாம் உயர் பதவிகளை அலங்கரிக்கின்றனர். எனக்கு எப்போதுமே இரண்டாமிடம் தானா...' என கவலைப்படுகிறார், டில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மணீஷ் சிசோடியா.டில்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் சிக்கி, துணை முதல்வர் பதவியை இழந்தவர் தான், மணீஷ் சிசோடியா. இவருக்கு பின், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலும் இந்த வழக்கில் சிக்கி, சிறைக்கு சென்றார்.இதனால், முதல்வர் பதவியை, அந்த கட்சியின் இளம் பெண் தலைவர்களில் ஒருவரான ஆதிஷிக்கு விட்டுக் கொடுத்தார், கெஜ்ரிவால். டில்லியில் வரும் பிப்., 5ல் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது.இதற்காக, ஆம் ஆத்மி கட்சியினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். சமீபத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஆதிஷி, கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் பங்கேற்றனர்.அப்போது பேசிய கெஜ்ரிவால், 'மதுபான கொள்கை வழக்கில், தற்போது ஜாமினில் வந்துள்ளேன். இதில் மீண்டும் நான் சிறைக்கு சென்றாலும், அதைப் பற்றி கவலைப்பட மாட்டேன். முதல்வருக்கான பணியை ஆதிஷி சிறப்பாக செய்கிறார்.'இந்த தேர்தலில், ஆம் ஆத்மி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும்; மணீஷ் சிசோடியா கண்டிப்பாக மீண்டும் துணை முதல்வராக பதவியேற்பார்...' என்றார்.இதை கேட்டதும், சிசோடியாவின் முகம் இருண்டு விட்டது. 'முதல்வர் பதவிக்கும், நமக்கும் ராசியில்லையோ...' என புலம்புகிறார், சிசோடியா.
24-Jan-2025