உள்ளூர் செய்திகள்

‘இது தேவைதானா?’

‘எதிர்க்கட்சியினரை கவுரவிக்க நினைத்தால், இப்படித் தான் அவமானப்பட வேண்டியிருக்கும்...’ என, கேரள முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சதீசனிடம் அக்கட்சி நிர்வாகிகள் புலம்புகின்றனர். கேரள மாநிலம் உருவாகி, 70 ஆண்டுகள் முடி வடைந்ததை கொண்டாடும் வகையில், கேரள சட்டசபை சார்பில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கேரள முதல்வர் சதீசன், ‘இந்த விழாவை கட்சி பாகுபாடின்றி கொண்டாட வேண்டும். ஏற்கனவே சபாநாயகர், துணை சபாநாயகராக பதவி வகித்தவர்கள், அதிக முறை எம்.எல்.ஏ.,வாக பதவி வகித்தவர்களை அழைத்து பேச வைக்க வேண்டும்...’ என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதன்படி, 1987 – 1991 காலகட்டங்களில் துணை சபாநாயகராக பதவி வகித்தவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த பெண் தலைவருமான பார்கவி, 84, சிறப்பு பேச்சாளராக அழைக்கப் பட்டிருந்தார். அவர், ‘சட்ட சபையிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு போதிய அளவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை...’ என்றார். அப்போது, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர், ‘இன்னும் பலர் பேச வேண்டியுள்ளது; சீக்கிரம் உங்கள் பேச்சை முடியுங்கள்...’ என்றார். இதனால் கடுப்பான பார்கவி, ‘பெண்களை பேசவிடாமல் ஒடுக்குவதே ஆட்சியாளர்களுக்கு வழக்கமாகி விட்டது...’ என கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதை பார்த்த காங்., பிரமுகர்கள், ‘நம் கட்சிக்காரர்களை பேச அழைத்திருக்கலாம். முதல்வருக்கு இது தேவைதானா...?’ என, முணுமுணுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை